பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதேச ராணுவ தினத்தை இந்திய இராணுவம் கொண்டாடியது

Posted On: 09 OCT 2021 3:12PM by PIB Chennai

தனது 72-வது நிறுவன தினத்தை 2021 அக்டோபர் 9 அன்று பிரதேச ராணுவம் கொண்டாடியது. இந்த நிகழ்வின் போது, தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த அஞ்சா நெஞ்சர்களுக்கு பிரதேச ராணுவத்தின் தலைமை இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் பிரீத் மொஹிந்திர சிங் தேசிய போர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்த தினத்தை குறிக்கும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1948 ஆகஸ்ட் 18 அன்று பிரதேச ராணுவ சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து தனது தற்போதைய நிலைக்கு பிரதேச ராணுவம் வந்தது. தொடக்கத்தில், காலாட்படை, ஆயுதமேந்திய வீரர்கள், வான் பாதுகாப்பு படை, சமிக்ஞைகள், விநியோகம் மற்றும் இதர பிரிவுகளை பிரதேச ராணுவம் கொண்டிருந்தது. 1949 அக்டோபர் 9 அன்று முதல் கவர்னர் ஜெனரலான திரு சி ராஜகோபாலாச்சாரியாவால் முறையாக நிறுவப்பட்டதில் இருந்து, பிரதேச ராணுவ நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

மண்ணின் மைந்தர்கள் எனும் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த ஹோம் அண்ட் ஹார்த் படைப்பிரிவுகளை தவிர, இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பிரதேச ராணுவத்தின் அலகுகள் இணைந்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762397

*****************


(Release ID: 1762466) Visitor Counter : 380