நிதி அமைச்சகம்
ஐ-ஸ்பிரின்ட்’21 தொடக்கம்: ஐஎஃப்எஸ்சிஏ-வின் சர்வதேச ஃபின்டெக் ஹேக்கத்தான் வரிசை ‘ஸ்பிரின்ட்01: பேங்க்டெக்”
Posted On:
08 OCT 2021 2:37PM by PIB Chennai
ஐ-ஸ்பிரின்ட்’21 எனும் சர்வதேச நிதி தொழில்நுட்ப (ஃபின்டெக்) ஹேக்கத்தான் வரிசையை 2021 அக்டோபர் 7 அன்று காலை 11.30 மணிக்கு சர்வதேச நிதி சேவைகள் மையங்களின் ஆணையம் (ஐஎஃப்எஸ்சிஏ) மற்றும் கிஃப்ட் சிட்டி ஆகியவை தொடங்கின. இதன் முதல் பகுதியான ‘ஸ்பிரின்ட்01: பேங்க்டெக்’ வங்கியியல் துறையின் நிதி தொழில்நுட்பங்களின் மீது கவனம் செலுத்துகிறது.
‘ஸ்பிரின்ட்01: பேங்க்டெக்’-கை நிதி ஆயோக்குடன் இணைந்து சர்வதேச நிதி சேவைகள் மையங்களின் ஆணையம் மற்றும் கிஃப்ட் சிட்டி நடத்துகின்றன. ஐசிஐசிஐ வங்கி, எச்எஸ்பிசி வங்கி, இகிரியேட், ஜோன் ஸ்டார்டப்ஸ் மற்றும் இன்வெஸ்ட்-இந்தியா ஆகியவை இந்த ஹேக்கத்தானின் பங்குதாரர்கள் ஆவர்.
ஸ்பிரின்ட்01: பேங்க்டெக்-கின் கீழ் வழங்கப்படவுள்ள முக்கிய பரிசுகள் மற்றும் அங்கீகாரங்கள் பின்வருமாறு:
1. ஃபின்டெக் இறுதி சுற்றாளர்களுக்கு சர்வதேச நிதி சேவைகள் மையங்களின் ஆணைய ஒழுங்குமுறை/புத்தாக்க சேண்ட்பாக்ஸுக்குள் நேரடி அனுமதி கிடைக்கும்.
2. பங்குதார வங்கிகளுடன் ஃபின்டெக்குகள் நேரடியாக பணியாற்றலாம்.
3. 2021 டிசம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச நிதி சேவைகள் மையங்களின் ஆணையத்தின் முதன்மை ஃபிண்டெக் நிகழ்ச்சியில் ஃபின்டெக்குகளுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வாய்ப்பு.
4. ரூ 24 லட்சம் பரிசுத் தொகை ஐகிரியேட்டால் வழங்கப்படும்.
5. ஜோன் ஸ்டார்டப் இந்தியா நெட்வொர்க்கில் இருந்து $25,000 வரையிலான வணிக ஆதரவு தீர்வு பங்குதாரர் பலன்கள்.
மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்ப செயல்முறைக்கு www.isprint.in அல்லது www.ifsca.gov.in ஆகிய இணைய பக்கங்களை பார்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1762086
*****************
(Release ID: 1762187)
Visitor Counter : 258