தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நியூஸ் ஆன் ஏர் செயலியில் அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளின் தர வரிசைப் பட்டியல் : மராத்தி சேவை பிரபலம்
प्रविष्टि तिथि:
08 OCT 2021 2:05PM by PIB Chennai
நியூஸ் ஆன் ஏர் செயலியில் அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளின் தர வரிசைப் பட்டியலில் மராத்தி சேவையான, அஸ்மிதா மும்பை காலை நேரங்களில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.
அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகள் பிரபலமாக உள்ள நகரங்களின் தரவரிசை பட்டியலில் தில்லி தேசிய தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் மும்பை முன்னேறியுள்ளன. சென்னை 2 இடங்கள் பின்தங்கியது.
பிரசார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர்-ல் அகில இந்திய வானொலியின் சுமார் 240 சேவைகள் நேரலையாக ஒலிபரப்பப்படுகின்றன.
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் 85-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 8000 நகரங்களில் வசிக்கும் மக்கள் இந்த செயலியின் வாயிலாக அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு வருகின்றனர்.
நியூஸ் ஆன் ஏர் செயலியின் ரேடியோ ஒலிபரப்பில் பிரபலமாக உள்ள நகரங்களின், நிகழ்ச்சிகள், சேனல்களின் தரவரிசை பட்டியலை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும். செப்டம்பர் 16ம் தேதி முதல் 29 தேதி வரை பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில், இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1762071
*****************
(रिलीज़ आईडी: 1762125)
आगंतुक पटल : 221