சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஜம்மு-காஷ்மீரில் அமைதியான செழிப்பான சூழ்நிலையைக் குலைக்க, தீய சக்திகள் தங்கள் மோசமான நோக்கத்தில் வெற்றிபெற அனுமதிக்கப்பட மாட்டா என்று சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
Posted On:
07 OCT 2021 4:13PM by PIB Chennai
பயங்கரவாதம் மற்றும் வன்முறை மூலம் ஜம்மு-காஷ்மீரில் அமைதியான செழிப்பான சூழ்நிலையைக் குலைக்க, தீய சக்திகள், தங்கள் மோசமான நோக்கத்தில் வெற்றிபெற அனுமதிக்கப்பட மாட்டா என்று சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்
இன்று ஜம்மு-காஷ்மீர் புட்காமில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டல்/தொடக்க விழாவின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் உரையாற்றிய திரு. நக்வி,
அப்பாவி மக்களைக் கொல்லும் கொலைக் குற்றவாளிகள் அகற்றப்படுவார்கள் என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி "பரிக்ரமா அரசியலை" "சரியான செயல்திறன்" என்பதாக மாற்றியுள்ளார் என்று திரு. நக்வி கூறினார். ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகியவை பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத நோயை ஒழிப்பதன் மூலம் செழிப்பான பாதையில் முன்னேறி வருவதை இது உறுதிப்படுத்தியுள்ளது.
*****
(Release ID: 1761904)
Visitor Counter : 196