வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

லக்னோவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் மாநாடு-கண்காட்சிக்கு உற்சாகமான வரவேற்பு

Posted On: 06 OCT 2021 2:04PM by PIB Chennai

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் லக்னோவில் உள்ள இந்திரா காந்தி பிரதிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளவிடுதலை@75 - புதிய நகர்ப்புற இந்தியா: நகர்ப்புற பகுதிகளை மாற்றியமைத்தல்எனும் மாநாடு மற்றும் கண்காட்சிக்கு மக்கள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரிடம் இருந்தும் உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த மாநாடு மற்றும் கண்காட்சி பிரதமர் திரு நரேந்திர மோடியால் நேற்று திறந்து வைக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இந்த கண்காட்சி திறந்திருக்கும்.

'விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின்' ஒரு பகுதியாக இந்த மூன்று-நாள் மாநாடு-கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் 75 ஆண்டுகால வளர்ச்சி மற்றும் அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் வெற்றி வரலாற்றைக் கொண்டாடும் மற்றும் நினைவுகூரும் இந்திய அரசின் முயற்சியாக இது அமைந்துள்ளது.

நாட்டின் மாறிவரும் நகர்ப்புற பகுதிகள், குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மீது கவனம் செலுத்தி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூரிய எரிசக்தி, குப்பையில் இருந்து மின்சாரம் மற்றும் நகர்ப்புற போக்குவரத்து ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று உத்தரப்பிரதேச அரசு மற்றும் இந்திய அரசு நிறுவனமான சோலார் எனெர்ஜி கார்ப்பரேஷன் ஆகியவற்றுக்கிடையே இன்று கையெழுத்தானது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761378

 

----



(Release ID: 1761537) Visitor Counter : 217


Read this release in: English , Urdu , Hindi