சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 அண்மைத் தகவல்

Posted On: 06 OCT 2021 9:16AM by PIB Chennai

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 92.17 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 18,333 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவிதத்துக்கும் கீழ் உள்ளது. தற்போது 0.73 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் மாதம் முதல், இது  மிகக் குறைந்த அளவு.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,46,687; கடந்த 203 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 97.94 சதவீதம்; கடந்த 2020 மார்ச் முதல் இது அதிகமான அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 24,770 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,31,75,656

வாராந்திர பாதிப்பு விகிதம் (1.68 சதவீதம்) கடந்த 103 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் (1.34 சதவீதம்) கடந்த 37 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை மொத்தம் 57.68 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1761279

*******



(Release ID: 1761340) Visitor Counter : 176