சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

புதிய நெடுஞ்சாலை திட்டம், நாசிக்கில் இணைப்பை அதிகரிக்கும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Posted On: 05 OCT 2021 1:44PM by PIB Chennai

புதிய நெடுஞ்சாலை திட்டம், நாசிக்கில் இணைப்பை அதிகரிக்கும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ரூ.1,678 கோடி மதிப்பிலான  206 கி.மீ தூர தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் திரு நிதின்கட்கரி நேற்று தொடங்கி வைத்தார். இதில் பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு கபில் மொரேஸ்வர் பாட்டீல், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் திரு நிதின்கட்கரி பேசியதாவது:

மகாராஷ்டிராவில் தற்போது, அனைத்து மாவட்டங்களும், தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளன.  புதிய நெடுஞ்சாலை திட்டங்களால், நாசிக்கில் இணைப்பு அதிகரிக்கும். சூரத்-நாசிக்-அகமதுநகர்-சோலாப்பூர்-சென்னை விரைவுச் சாலை திட்டத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

நாசிக்-மும்பை நெடுஞ்சாலை ரூ.5,000 கோடி செலவில் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்படும்.

பிம்ப்ரிசாடோ முதல் கோண்டே வரை 20 கி.மீ தூர 6 வழிச் சாலை, நாசிக் ரோடு முதல் துவாரகா வரை உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

இவ்வாறு திரு. நிதின்கட்கரி கூறினார்.

மத்திய இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் பேசுகையில், ‘‘தற்போது, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், தொலைதூர பழங்குடியின பகுதிகளில் போக்குவரத்தை மிகவும் எளிதாக்கியுள்ளது மற்றும் தொலைதூர பகுதிகளை நகரத்துடன் இணைத்துள்ளது’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761056

----



(Release ID: 1761154) Visitor Counter : 197


Read this release in: Urdu , English , Marathi , Hindi