அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

பிரகாசமான எல்இடி- விளக்குக்கு பயன்படும் நானோ-படிகங்களின் அளவிடக்கூடிய தொகுப்பு முறை உருவாக்கம்

प्रविष्टि तिथि: 05 OCT 2021 1:26PM by PIB Chennai

பிரகாசமான எல்இடி விளக்குகள் தயாரிக்க, சிறப்பு வகை குறைக்கடத்தி நானோ படிகங்களின் பெரிய அளவிலான தொகுப்புக்கு உதவும் ஒரு  முறையை இந்திய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இரு பரிமாண அடுக்கு பெரோவ்ஸ்கைட் மற்றும் பெரோவ்ஸ்கைட் என்றழைக்கப்படும் இந்த நானோ படிகங்கள் பிரகாசமான உமிழ்வு வண்ணங்களைக் கொண்டுள்ளன மற்றும் சுற்றுச்சூழலால் பாதிக்கப்படாது. அவை சுத்தமான வண்ணம் மற்றும் குறைந்த விலைக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டிஎஸ்டி) கீழ் உள்ள நானோ மற்றும் சாஃப்ட் மேட்டர் சயின்சஸ் (CeNS), என்ற தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனத்தின்  ஆராய்ச்சியாளர்கள் குழு, இரு பரிமாண அடுக்கு பெரோவ்ஸ்கைட் மற்றும் பெரோவ்ஸ்கைட் நானோ கிரிஸ்டல்களை, சோனோ ரசாயன  செயல்முறை என்று அழைக்கப்படும் ஒரு முறையால் ஒருங்கிணைத்துள்ளது. இது பெரும்பாலும் பெரிய அளவிலான தொகுப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.

எதிர்வினையின் போது இந்த நானோ பொருட்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதை இந்த குழுவினர் கண்காணித்தனர். இந்த நானோ பொருட்கள் மற்றும் அவற்றின் உமிழ்வு வண்ணங்களின் பரிமாணத்தை மாற்ற, நேரம் மற்றும் வெப்பநிலை போன்ற எதிர்வினை அளவுருக்களை அவர்கள் கட்டுப்படுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு டாக்டர் பிரலே கே. சான்ட்ராவை (psantra@cens.res.in) என்ற -மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761049

 

-----


(रिलीज़ आईडी: 1761095) आगंतुक पटल : 247
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi