அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அல்சைமர் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் முக்கிய கண்டுபிடிப்பு : ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிக்கு விருது
Posted On:
04 OCT 2021 3:28PM by PIB Chennai
அல்சைமர் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் முக்கிய கண்டுபிடிப்புக்காக மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் உள்ள தான்னாட்சி நிறுவனமான ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மைய பேராசிரியர் டி. கோவிந்தராஜூவுக்கு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது கிடைத்துள்ளது.
சிறிய மூலக்கூறுகள், புரதங்கள் மற்றும் இயற்கை பொருட்களில் இவரது புதுமையான பணி, கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகிய இரண்டையும் வழங்குகிறது. இது தனிப்பட்ட மருத்துக்கும் வழிவகுக்கிறது. இவர் நரம்பியல் அறிவியல் துறையில தனது ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டார்.
இவரது ஆராய்ச்சி உயிரின மற்றும் வேதியியல் உயிரியலில் கவனம் செலுத்தியது. மனித ஆரோக்கியம்-நரம்புச் சிதைவு நோய்கள் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றுடன் தொடர்புடைய தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறது.
பேராசிரியர் கோவிந்தராஜுவின் கடந்த 10 வருட தொடர்ச்சியான ஆராய்ச்சி முயற்சிகள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பலனளித்தன. அவர் டிஜிஆர்63 என்ற புதிய மூலக்கூறு மருந்தை கண்டுபிடித்தார். இது அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட மூளையில் உள்ள அமிலாய்ட் எனப்படும் நச்சு புரத திரட்டல் இனங்களின் சுமையை திறம்பட குறைக்கிறது. இவரது பரிசோதனைகளை ஒரு மருந்து நிறுவனம் எடுத்துள்ளது. இது மனிதர்களின் அல்சைமர் நோய் சிகிச்சைக்கு சிறப்பாக உதவும் எனத் தெரிகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760791
----
(Release ID: 1760877)
Visitor Counter : 240