திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பயிற்சி திருவிழாவை அக்டோபர் 4 அன்று ஸ்கில் இந்தியா நடத்த உள்ளது

प्रविष्टि तिथि: 02 OCT 2021 6:15PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய பயிற்சி திருவிழாவை 2021 அக்டோபர் 4 அன்று பயிற்சி தலைமை இயக்குநரகம் மற்றும் தேசிய திறன் வளர்ச்சி கழகம் ஆகியவற்றின் ஆதரவோடு ஸ்கில் இந்தியா நடத்த உள்ளது.

5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்துள்ள மாணவர்கள், திறன் பயிற்சி சான்றிதழ் பெற்றுள்ளவர்கள், ஐடிஐ மாணவர்கள், பட்டயப் படிப்பு முடித்தவர்கள் மற்றும் பட்டதாரிகள் இந்த பயிற்சி திருவிழாவிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். தங்களது சுயவிவர குறிப்பின் மூன்று நகல்கள், அனைத்து

மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ்களின் மூன்று நகல்கள், ஆதார் அட்டை அல்லது ஓட்டுனர் உரிமத்தின் நகல், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை இந்நிகழ்ச்சியில் பங்கேற்போர் கொண்டு வர வேண்டும்.

பயிற்சி திருவிழா எங்கு நடக்கிறது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள https://dgt.gov.in/appmela/ என்ற இணைப்பை அணுகலாம்.

தொழில் பயிற்சியில் நாடு முழுவதும் அதிக பங்கேற்பை ஊக்கப்படுத்துவதற்காக பயிற்சி விதிகளில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைதல் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760389

*****************


(रिलीज़ आईडी: 1760419) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi