நிதி அமைச்சகம்
அகமதாபாத்தில் வருமானவரித் துறையினர் சோதனை
Posted On:
02 OCT 2021 11:00AM by PIB Chennai
அகமதாபாத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் குழுமம் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடைத்தரகர்களின் வீடுகள், அலுவலகங்களில் 28.09.2021 அன்று வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 22 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டது. இந்த ஆவணங்களின்படி அந்த ரியல் எஸ்டேட் குழுமம், முறைகேடாக ரூ.200 கோடிக்கு மேல் நிலம் வாங்கியிருப்பதும், நிலம் விற்பனை செய்தவர்களிடமிருந்து ரூ.100 கோடி வரை பெறப்பட்டதற்கான ரசீது உள்ளிட்டவையும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் புரோக்கர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இந்த நிலம் வாங்கல், விற்பனையில் ரூ.230 கோடிக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆவணங்களும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ரூ.500 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டிருப்பதுடன் சுமார் ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் ரூ.98 லட்சம் மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
****
(Release ID: 1760315)
Visitor Counter : 235