சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு தன்னார்வ ரத்த தான முகாமிற்கு சுகாதார அமைச்சகம் ஏற்பாடு செய்தது

Posted On: 01 OCT 2021 7:10PM by PIB Chennai

தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தையொட்டி, தன்னார்வ ரத்த தான முகாமை சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் சுனில் குமாருடன் இணைந்து மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், நிர்மான் பவனில் இன்று தொடங்கி வைத்தார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகம் மூலம் நிர்மாண் பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்த தான முகாமை தொடர்ந்து, அது தொடர்பான தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது.

ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி தேசிய தன்னார்வ ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது.

இதை குறிப்பதற்காக பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நாடு முழுவதும் ரத்த தான முகாம்கள் மற்றும் பிற விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கின்றன. இந்த வருட ரத்த தான நாளின் கருப்பொருள் "ரத்தத்தை கொடுங்கள் மற்றும் உலகை இயங்க வையுங்கள்" என்பதாகும்.

அனைவரும் பெருமளவில் முன்வந்து ஒரு உன்னதமான நோக்கத்திற்காக ரத்த தானம் செய்ய வேண்டும் என்றும், அவர்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதார செயலாளர் வேண்டுகோள் விடுத்தார். பிரதிபலன் எதுவும் எதிர்பாராத ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760064

*****************

(Release ID: 1760064) 


(Release ID: 1760131) Visitor Counter : 424


Read this release in: English , Urdu , Hindi