நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திட்ட செயல்பாட்டுக்கான கால அளவை ஆய்வு செய்ய மத்திய நிலக்கரி அமைச்சகம் குழு ஒன்றை அமைத்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2021 3:49PM by PIB Chennai

நிலக்கரி அமைச்சக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோல் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், பிற பொதுத் துறை நிறுவனங்களில் ரூ.300 கோடிக்கு மேல் மதிப்புள்ள டெண்டர் நடவடிக்கைகளை பரிசீலிப்பது உள்ளிட்ட பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ளப்படுவதை ஆய்வு செய்ய, துறையின் இணைச் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர் தலைமையில், என்டிபிசி, ஐஓசிஎல், பிஜிசிஐஎல் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர் செயலாளராக இசிஎல் நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****

 


(வெளியீட்டு அடையாள எண்: 1760059) வருகையாளர் எண்ணிக்கை : 202
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi