பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப்படை துணைத் தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் சந்தீப் சிங், ஏவிஎஸ்எம், வி.எம். பொறுப்பேற்பு

Posted On: 01 OCT 2021 1:36PM by PIB Chennai

விமானப்படை துணைத் தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் சந்தீப் சிங், ஏவிஎஸ்எம், வி.எம். 01. அக்டோபர் 2021 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தேசிய ராணுவ கல்லூரியில் பயின்றவரான ஏர் மார்ஷல், விமானப்படையின் பறக்கும் பிரிவில் டிசம்பர் 1983-ல் போர் விமானியாக பணியில் சேர்ந்தார். பரிசோதனை சோதனை விமானி மற்றும் தகுதி பெற்ற ஃபிளையிங் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றி உள்ளார். பல்வேறு ரக போர் விமானங்களை இயக்கி இருப்பதுடன், சுமார் 4,400 மணி நேரத்திற்கு போர் விமானங்களில் பறந்து, பழுத்த அனுபவம் பெற்றவர் ஆவார்.

விமானப்படையில் தமது 38 ஆண்டு கால பணிக்காலத்தில், எல்லையோர படைத்தளம் உட்பட விமானப்படையின் பல்வேறு பிரிவுகளில் அவர் முக்கிய  பொறுப்புகளை வகித்துள்ளார். இதற்கு முன்பு வரை அவர் தெற்கு மேற்கு பிராந்திய விமானப்படையின் ஏர் ஆபீசர் கமாண்ட் பொறுப்பையும் வகித்துள்ளார். ஏர் மார்ஷல் சந்தீப் சிங் அதி விசிஸ்ட் சேவா பதக்கம் மற்றும் விசிஸ்ட் சேவா பதக்கங்களை வென்றுள்ளார்.

 

***

 (Release ID: 1759916)


(Release ID: 1760028) Visitor Counter : 261


Read this release in: English , Urdu , Hindi , Bengali