பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு கணக்குத் துறை அதன் ஆண்டு விழாவை கொண்டாடியது
Posted On:
01 OCT 2021 3:59PM by PIB Chennai
பாதுகாப்பு கணக்கு துறை அதன் ஆண்டு விழாவை 2021 அக்டோபர் 1 அன்று கொண்டாடியது. இந்த நிகழ்வை முன்னிட்டு, சிறந்த செயல்பாடு மற்றும் அர்ப்பணிப்புக்கான பாதுகாப்பு அமைச்சரின் விருதுகளை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கணக்குகளின் தலைமை கட்டுப்பாட்டாளர் திரு ரஜினிஷ் குமார் வழங்கினார்.
முதல் விருதை பாதுகாப்பு கணக்குகளின் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் உள்ள நிர்வாகப் பிரிவு மற்றும் பிசிடிஏ (ஓய்வூதியம்) பிரயாக்ராஜ் அலுவலகம் பகிர்ந்து கொண்டன.
கொவிட் -19 நெருக்கடியைக் கையாள்வதில் முன்மாதிரியான செயல்திறனுக்காக, பாதுகாப்பு கணக்குகள் அலுவலகத்தின் தலைமை கட்டுப்பாட்டாளரின் நிர்வாகப் பிரிவுக்கு விருது வழங்கப்பட்டது. பயிற்சி திட்டத்தின் புதுமையான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக பிசிடிஏ (தென்மேற்கு கட்டளை), ஜெய்ப்பூருக்கு மூன்றாவது விருது வழங்கப்பட்டது.
டேராடூன் பிசிடிஏ (விமானப் படை)-க்கு பாதுகாப்பு கணக்குகளின் தலைமை கட்டுப்பாட்டாளர் ஊக்க விருதுகள் 2021-ஐ பாதுகாப்பு கணக்குகளின் தலைமை கட்டுப்பாட்டாளர் வழங்கினார். மின்-அலுவலகம், புதிய தொகுப்பு அமைப்பு, சிஃபா பிளஸ் எனும் ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர்களுக்கான அமைப்பு மற்றும் தணிக்கை மென்பொருள் ஆகிய நான்கு புதிய திட்டங்களை திரு குமார் தொடங்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759964
*****************
(Release ID: 1760023)