சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய தலைநகர் மண்டலத்தில் தூசி பரவல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்க, விரிவான இணையதள நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதை காற்றுத் தர மேலாண்மை ஆணையம் கட்டாயமாக்கி உள்ளது

प्रविष्टि तिथि: 01 OCT 2021 1:31PM by PIB Chennai

தேசிய தலைநகர் மண்டலத்தில் கட்டுமானப்பணி மற்றும் கட்டட இடிப்பு காரணமாக ஏற்படக் கூடிய காற்று மாசு அளவை குறைக்கும் நடவடிக்கையாக, கட்டுமான மற்றும் கட்டட இடிப்பு பணியிடங்களில், தூசி குறைப்பு நடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை காற்றுத் தர மற்றும் மேலாண்மை ஆணையம் அவ்வப்போது ஆய்வு செய்யும். இத்திட்டப் பணிகளை மேற்கொள்வதால் தூசி குறைப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை இணையதளம் வாயிலாக கண்காணிப்பதற்கான ஆன்லைன் நடைமுறைகளை உருவாக்குமாறு, ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் மற்றும் தில்லி அரசுக்கு காற்றுத் தரம் மற்றும் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தேசிய தலைநகர் மண்டலத்தில் தூசி குறைப்பு நடவடிக்கைக்கான நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்கான சரிபார்ப்புப் பட்டியலை உருவாக்க இந்த ஆன்லைன் நடைமுறையில் வகை செய்யப்பட்டுள்ளது. தூசி குறைப்பு நடவடிக்கை பட்டியலில் புகை எதிர்ப்பு துப்பாக்கிகள், தண்ணீர் மாத்திரைகள், தண்ணீர் பீரங்கிகள், ஹோஸ்கள், தீ தடுப்பு பொருட்கள், தண்ணீர் தெளிப்பான்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்புப் பணியில் ஈடுபடுவோர், இந்த சாதனங்களை பொருத்தியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அரசின் பிற அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் இந்தப் பணிகளை கண்காணிக்க வகை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759914

*******


(रिलीज़ आईडी: 1759982) आगंतुक पटल : 272
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi