ஐஃஎப்எஸ்சி ஆணையம்
azadi ka amrit mahotsav

நிலையான நிதி தொடர்பான நிபுணர் குழு அமைப்பு

Posted On: 30 SEP 2021 3:36PM by PIB Chennai

இந்தியாவில் உள்ள சர்வதேச நிதி சேவைகள் மையங்களில் (ஐஎஃப்எஸ்சி) நிதி சேவைகள், திட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை மேம்படுத்தி சீரமைப்பதற்காக சர்வதேச நிதி சேவைகள் மையங்களின் ஆணையகம் உருவாக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தேசிய அளவில் பெறப்பட்ட பங்களிப்புகளின்  அடிப்படையில் பருவ நிலை குறித்த நடவடிக்கைகளில் முன்னிலை வகிப்பதை இந்தியா இலக்காக கொண்டுள்ளது நிரூபணமாகிறது. பருவநிலை மாற்றத்திற்கு தயார்படுத்திக்கொள்ளவும், நடவடிக்கைகளை அதிகரிக்கவும், நிதி ஆதாரங்களை அதிகரிப்பதற்கு சர்வதேச முதலீட்டாளர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பு அவசியமாகிறது. இந்தியாவிற்கு அளிக்கப்படும் அந்நிய மூலதனங்களை சீராக வழிநடத்துவதன் மூலம் நிலையான நிதிக்கான சர்வதேச முனையமாக கிஃப்ட்-ஐஎஃப்எஸ்சியை செயல்படுத்த ஆணையகம் திட்டமிட்டுள்ளது.

இதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதற்காக, நிலையான நிதி முனையத்தை மேம்படுத்துவது சம்பந்தமான அணுகுமுறையை பரிந்துரைக்கவும், இதற்கான திட்டத்தை வடிவமைக்கவும் ஓர் நிபுணர் குழுவை சர்வதேச நிதி சேவைகள் மையங்களின் ஆணையகம் அமைத்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் திரு சி கே மிஸ்ரா தலைமையில் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச முகமைகள், தர நிர்ணய அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அடங்கிய நிலையான நிதி அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

https://ifsca.gov.in/IFSCACommittees என்ற இணையதளத்தில் குழு பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759639

*****************


(Release ID: 1759739) Visitor Counter : 175


Read this release in: English , Urdu , Hindi , Malayalam