சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ராஜஸ்தானில் நான்கு மாவட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி சிபெட் ஜெய்பூரை திறந்து வைத்தார்


“ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயனளிக்கும் வகையில் அகில இந்திய அளவில் மருத்துவ முறையை சீர்திருத்த, முதல்வராக இருந்தபோது நான் பெற்ற அனுபவத்தை பயன்படுத்துகிறேன்”

Posted On: 30 SEP 2021 3:11PM by PIB Chennai

ராஜஸ்தானில் நான்கு மாவட்ட மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் & தொழில்நுட்ப நிறுவனம் (சிபெட்) ஜெய்பூர் ஆகியவற்றுக்கு  மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா, ராஜஸ்தான் முதல்வர் திரு அசோக் கெலாட், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் ஆகியோரின் முன்னிலையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். சிரோஹி, ஹனுமன்கர், பன்ஸ்வாரா மற்றும் தவுசா மாவட்டங்களுக்கு இந்த நான்கு மருத்துவக் கல்லூரிகள் சேவை செய்யும்.

பல சுகாதார அமைப்புகளைக் கொண்டிருப்பதால் நாட்டின் சுகாதாரத் துறையின் குறைபாடுகள் பற்றிய புரிதலை குஜராத்தின் முதல்வராக இருந்த அனுபவம் தமக்கு வழங்கியதாக பிரதமர் குறிப்பிட்டார். "நாட்டின் சுகாதாரத் துறையை மாற்றுவதற்கு ஒரு தேசிய அணுகுமுறை மற்றும் தேசிய சுகாதாரக் கொள்கையை நாங்கள் வகுத்துள்ளோம். தூய்மை இந்தியா இயக்கம் முதல் ஆயுஷ்மான் பாரத் மற்றும் இப்போது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் வரை, இதுபோன்ற பல முயற்சிகள் இந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். 2,500 சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களுடன் ராஜஸ்தானில் சுமார் 3.5 லட்சம் மக்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

இலவச தடுப்பூசி, அனைவருக்கும் தடுப்பூசிபிரச்சாரத்தின் வெற்றியை பிரதமர் சுட்டிக்காட்டினார்: ராஜஸ்தானில் 5 கோடிக்கும் அதிகமான டோஸ்களும், இந்தியாவில் 88 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன

பெட்ரோ கெமிக்கல் தொழில் போன்ற வேகமாக வளர்ந்து வரும் தொழிலுக்கு திறமையான மனிதவளம் தேவை என்று பிரதமர் குறிப்பிட்டார். புதிய சிபெட்: பெட்ரோ கெமிக்கல் தொழில்நுட்ப நிறுவனம் லட்சக்கணக்கான இளைஞர்களை புதிய சாத்தியக்கூறுகளுடன் இணைக்கும் என்று அவர் கூறினார். கழிப்பறைகள், மின்சாரம், எரிவாயு இணைப்புகளின் வருகையால் வாழ்க்கை முறை எளிதாகி இருப்பது குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முக்கிய நிகழ்வுக்காக தமது நன்றியைத் தெரிவித்த திரு மன்சுக் மாண்டவியா, “ஆரோக்கியத்தை வளர்ச்சியுடன் இணைத்த முதல் நிர்வாகி பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள். அக்டோபர் 7-ம் தேதி அவர் 20 ஆண்டுகள் பொது சேவையை நிறைவு செய்யும்போது, ​​அனைவருடன், அனைவரின் நலன் என்ற அவரது அழைப்பை உருவகப்படுத்தும் சுகாதார துறையின் சாதனைகளை ஒருவர் நினைவு கூராமல் இருக்க முடியாது,” என்றார்.

பழங்குடியினர் அதிகமாகவுள்ள மற்றும் வளர்ச்சியடையாத நான்கு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்காக திரு ஓம் பிர்லா பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்: "குறைவான கட்டணத்தில் மருத்துவக் கல்வி மற்றும் நல்ல தரமான சுகாதாரப் பாதுகாப்பு சேவைகள் மூலம் உள்ளூர் மக்கள் பெரிதும் பயனடைவார்கள்,” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்வு இணையத்தில் கீழ்காணும் இணைப்பில் ஒளிபரப்பப்பட்டது:

https://youtu.be/XZQKOzcqL3c

*****************



(Release ID: 1759720) Visitor Counter : 175