சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
4-வது இந்திய-அமெரிக்க சுகாதாரப் பேச்சுவார்த்தை 2021: நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா உரை
Posted On:
28 SEP 2021 4:48PM by PIB Chennai
இந்தியா நடத்தும் 4-வது இந்திய-அமெரிக்க சுகாதாரப் பேச்சு வார்த்தையின் நிறைவு விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று உரையாற்றினார்.
தொற்றுநோயியல் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு, தடுப்பூசி வளர்ச்சி, சுகாதார அமைப்பு முறைகள் மற்றும் கொள்கைகள் உள்ளிட்டவற்றை வலுப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்வது தொடர்பாக இரண்டு நாள் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.
நிறைவு விழாவின் போது இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. மருத்துவம் மற்றும் உயிரி மருத்துவ அறிவியல் துறையில் இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்திற்கும் அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறைக்கும் இடையே ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உயர்தர ஆராய்ச்சிக்கான சர்வதேச மையம் தொடர்பான ஒத்துழைப்பை அளிப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கும், ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்துக்கும் இடையே மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இரு நாடுகளிடையே ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான ஒத்துழைப்பு ஏற்படுவதன் வாயிலாக இரு தரப்புக்கு மட்டுமல்லாமல் உலகிற்கிற்கே அமைதி, இணக்கம் மற்றும் வளர்ச்சி ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2000-ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த மறைந்த திரு.அடல் பிகாரி வாஜ்பாய் தமது அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவை ‘இயற்கையான கூட்டணி’ என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த அமைச்சர், மருந்து மற்றும் மருத்துவத்துறையில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்கப்படுத்துவதற்கான இந்திய-அமெரிக்க சுகாதாரப் பேச்சுவார்த்தை உண்மையிலேயே போற்றத்தக்கது என்று பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758966
------
(Release ID: 1759048)
Visitor Counter : 261