சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
2030-க்குள் நாய் மூலம் பரவும் ரேபிஸ் நோய் ஒழிப்புக்கான தேசிய செயல் திட்டத்தை திரு மன்சுக் மாண்டவியா மற்றும் திரு பர்ஷோத்தம் ருபாலா தொடங்கி வைத்தனர்
Posted On:
28 SEP 2021 4:44PM by PIB Chennai
உலக ரேபிஸ் தினமான இன்று, 2030-ஆம் ஆண்டுக்குள் நாய் மூலம் பரவும் ரேபிஸ் நோயை ஒழிப்பதற்கான தேசிய செயல் திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபாலா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் டாக்டர். பாரதி பிரவீன் பவார் மற்றும் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளம் இணை அமைச்சர் திரு சஞ்சீவ் குமார் பல்யான் ஆகியோர் உடனிருந்தனர்.
ரேபிஸை அறிவிக்கப்பட்ட நோயாக ஆக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர். ஒரே சுகாதார அணுகல் மூலம் 2030-க்குள் நாய் மூலம் பரவும் ரேபிஸ் நோயை ஒழிப்பதற்கான “அமைச்சகங்களுக்கிடையேயான கூட்டு ஆதரவு அறிக்கை”-யை திரு மன்சுக் மாண்டவியா மற்றும் திரு பர்ஷோத்தம் ருபாலா வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு.மன்சுக் மாண்டவியா, “மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்ட உயிரினம் இல்லை என்பதால் சூழலியலில் உள்ள விலங்குகளிடம் இருந்து நோய்களைப் பெறுகின்றனர். முழுமையான அணுகலின் மூலமே இத்தகைய சவால்களை எதிர்கொள்ள முடியும்,” என்றார்.
ரேபிஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துமாறு அதிகாரிகளை திரு பர்ஷோத்தம் ருபாலா கேட்டுக்கொண்டார்.
https://youtu.be/ug64i6MoNfE எனும் இணைப்பில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758926
----
(Release ID: 1759034)