பாதுகாப்பு அமைச்சகம்
தேசிய மாணவர் படையின் 34-வது தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பல் சிங் பொறுப்பேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
27 SEP 2021 4:01PM by PIB Chennai
தேசிய மாணவர் படையின் 34-வது தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பல் சிங் இன்று (27.09.2021) பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் கடந்த 1987-ஆம் ஆண்டு பாராசூட் படையில் சேர்ந்தார்.
கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமி, தேசிய மாணவர் படை ஆகியவற்றின் முன்னாள் மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் சிங், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரி, புதுதில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியிலும் பயின்றார்.
நாகாலாந்து மற்றும் சியாச்சின் பனிப்பிரதேசத்தில் எதிர்த் தாக்குதல்கள் சூழலில் அவர் தலைமை வகித்தார். காஷ்மீரில் தீவிர எதிர்த் தாக்குதல்கள் சூழலிலும் சிறப்பு படைப் பிரிவிற்கு அவர் தலைமை வகித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758565
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1758645)
வருகையாளர் எண்ணிக்கை : 433