பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படை தளபதி ஓமன் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2021 2:44PM by PIB Chennai

கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், ஓமன் சென்றுள்ளார். அவர் நாளை முதல் செப்டம்பர் 29ம் தேதி வரை 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம், ஓமனுடனான இருதரப்பு உறவுகளை ஒருங்கிணைக்கும் மற்றும் ராணுவ கூட்டுறவுக்கான புதிய வழிகளை ஆராயும்.

மஸ்கட்டில், ஓமன் கடற்படை கமாண்டர் ரியர் அட்மிரல் சைப் பின் நசீன் பின் மொஹ்சன் அல் அராபியுடன், அட்மிரல் கரம்பிர் சிங்  இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த பயணத்தின் போது, ஓமன் நாட்டின் முப்படை உயர் அதிகாரிகளையும் கடற்படை தளபதி சந்தித்து பேசுகிறார். ஓமனில் உள்ள முக்கிய பாதுகாப்புப்படை தளங்களையும் அவர் பார்வையிடுகிறார்.

கடற்படை செயல்பாடுகள், பயிற்சிகள் உட்பட பல துறைகளில் இந்திய கடற்படை மற்றும் ஓமன் கடற்படை இணைந்து செயல்படுகின்றன. கடந்த 1993ம் ஆண்டு முதல்நசீம் அல் பஹர்என்ற பெயரில், இரண்டாண்டுக்கு ஒரு முறை கூட்டு பயிற்சியிலும் இரு நாட்டு கடற்படைகளும் ஈடுபட்டுள்ளன. கடற்படை தளபதியின் ஓமன் பயணம், இரு நாட்டு கடற்படைகள் இடையேயான ஒத்துழைப்பை வளர்க்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758251


(வெளியீட்டு அடையாள எண்: 1758365) வருகையாளர் எண்ணிக்கை : 311
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी