சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2021 5:56PM by PIB Chennai

மத்திய வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்திற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் பல வளர்ச்சிப் பணிகளை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார், மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் இருந்தார். அருணாச்சலப் பிரதேச முதல்வர் திரு பேமா காண்டு, துணை முதல்வர் திரு சவுனா மேன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு தபீர் காவ் மற்றும் இதர மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மத்திய அமைச்சர்களை வரவேற்றனர். 

அருணாச்சலப் பிரதேசத்தில் பிரசாத் திட்டத்தின் கீழ் "பரசுராம் குன்தின் வளர்ச்சி" திட்டத்திற்கு மத்திய அமைச்சர்கள் திரு ஜி கிஷன் ரெட்டி மற்றும் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள். அருணாச்சலப் பிரதேசத்தில் பரசுராம் குன்தின் மேம்பாட்டு திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

70 கிலோமீட்டர் இருசக்கர வாகன பயணம் மேற்கொண்ட அமைச்சர், அது குறித்து டிவிட்டரில் பதிவிட்டார். அமைதியான பள்ளத்தாக்கு, பிரமாண்ட மலைகள் மற்றும் அடர்ந்த காடுகள் கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தை அனைவரும் கட்டாயம் பார்வையிட வேண்டும் என்று அவர் கூறினார்.

அதிகாரிகளுடன் உரையாடிய அமைச்சர், "அஷ்டலட்சுமி மாநிலங்கள் அபரிமிதமான இன, கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை கொண்டவை. வடகிழக்கு பிராந்தியத்தின் சுற்றுலாத் திறனை வெளிப்படுத்த இது ஒரு தனித்துவமான வாய்ப்பு. கொவிட்டுக்கு மத்தியில் சுற்றுலாப் பயணிகளிடையே குறிப்பாக நம்பிக்கையை உருவாக்க வேண்டும்”, என்று கூறினார்.

அருணாசலப் பிரதேசம் முழுவதும் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் பல்வேறு குடிநீர் திட்டங்களைத் தொடங்குவதற்காக ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் திரு கிஷன் ரெட்டியுடன் இணைந்து கொண்டார். அருணாச்சலப் பிரதேச பயணத்தின் இரண்டாவது நாளில், நம்சாயில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆய்வு செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758075

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1758142) வருகையாளர் எண்ணிக்கை : 216
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Punjabi , Telugu