சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தானியங்கி சோதனை நிலையங்களின் அங்கீகாரம், ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டிற்கான விதிகள்

Posted On: 25 SEP 2021 8:29AM by PIB Chennai

1.       மோட்டார் வாகனச் சட்டம், 1988, மோட்டார் வாகன (திருத்தப்பட்டது) சட்டம் 2019-இன் பிரிவு 23 வாயிலாக, தானியங்கி சோதனை நிலையங்களை அங்கீகரிக்கவும், சீர்படுத்தவும், கட்டுப்படுத்தவும் மத்திய அரசு விதிகளை பிறப்பிக்க வழிவகை செய்கிறது.

2.       வாகனத்தின் தகுதியை ஆராய்வதற்குத் தேவையான பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள தானியங்கி சோதனை நிலையங்களில் இயந்திர உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வணிக வாகனங்களுக்கு (போக்குவரத்து) ஒவ்வொரு 2 முதல் 8 ஆண்டுகளுக்கும்,  8 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு ஒவ்வொரு வருடமும் சோதனை மேற்கொள்ளப்படும். தனிநபர் வாகனத்திற்கு (போக்குவரத்து அல்லாத) பதிவை புதுப்பிக்கும் போது (15 ஆண்டுகளுக்குப் பிறகு) தகுதி சோதனை செய்யப்படும்.

3.       வாகனத்தின் பாதுகாப்பு மற்றும் வெளியீட்டு தேவைகள், சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றுக்கு இந்த விதிகளில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள அமைப்பு முறைகளுக்கு ஏற்றவாறு இவை உருவாக்கப்பட்டுள்ளன.

4.       ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ அல்லது சங்கமோ அல்லது தனிநபர்களின் குழுவோ அல்லது சிறப்பு நோக்க அமைப்போ அல்லது மாநில அரசோ தானியங்கி சோதனை நிலையங்களுக்கு உரிமைதாரராகத் திகழவோ, அல்லது அவற்றை இயக்கவோ முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757907

*****************


(Release ID: 1758103) Visitor Counter : 245
Read this release in: Hindi , Punjabi , Bengali , English