நிதி அமைச்சகம்
தமிழகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
Posted On:
25 SEP 2021 10:37AM by PIB Chennai
சென்னையில் உள்ள 2 தனியார் சிண்டிகேட் நிதி குழுமங்களில் வருமான வரித்துறையினர் 23.09.2021 அன்று சோதனை நடத்தினர். சென்னையில் 35 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள பெரு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு கடனாக கணிசமான தொகையை ரொக்கமாக இந்த நிதி நிறுவனங்களும், அவற்றுடன் தொடர்புடைய அமைப்புகளும் வழங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் சோதனையின்போது கண்டறியப்பட்டன. மேலும், இந்த நிறுவனங்கள் அதிக வட்டியை வசூலிப்பதும், அவற்றின் ஒரு பகுதிக்கு வரி செலுத்தப்படாததும் தெரியவந்தது. கடன் பெறுபவர்கள் செலுத்தும் பெரும்பாலான வட்டி தொகைகள் போலியான வங்கி கணக்குகளில் பெறப்படுவதும், வரி நடைமுறைகளில் இந்த கணக்குகள் வெளியிடப்படாததும் சோதனையில் தெரியவந்தது. மேலும், கணக்கில் கொண்டு வரப்படாத தொகைகள், பாதுகாப்பற்ற கடன்களாக கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தவிர, இந்தக் குழுமத்தின் நபர்கள், கணக்கில் காட்டப்படாத சொத்து முதலீடுகள் மற்றும் இதர வருமானங்களைப் பெற்றிருப்பதற்கான ஆதாரங்களும் கண்டறியப்பட்டன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ. 300 கோடிக்கும் அதிகமான கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டறியப்பட்டுள்ளது. கணக்கில் வராத ரூ. 9 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757941
*****************
(Release ID: 1758011)
Visitor Counter : 284