ரெயில்வே அமைச்சகம்

யூடிஎஸ் மொபைல் செயலி தற்போது இந்தியிலும் கிடைக்கிறது

Posted On: 24 SEP 2021 5:18PM by PIB Chennai

இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியாகவும், பணமில்லா பரிவர்த்தனைகள், உடல் தொடர்பில்லாமல் பயணச்சீட்டு வழங்கும் முறை மற்றும் வாடிக்கையாளர் வசதி மற்றும் அனுபவத்தை மேம்படுத்தி ஊக்குவிக்கும் நோக்குடனும், யூபிஎஸ் கைப்பேசி செயலி தற்போது ஆங்கிலம் தவிர இந்தி மொழியிலும் கிடைக்கிறது.

பயனர் தனக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யலாம். செயலியை பயன்படுத்தி, பயனர்கள் காகிதமற்ற அல்லது காகித பயணச்சீட்டு முறையை தேர்வு செய்யலாம் மற்றும் கீழ்காணும் எந்த வகை பயணச்சீட்டுகளையும் பதிவு செய்யலாம்:-

 * பயண டிக்கெட் முன்பதிவு

* சீசன் டிக்கெட் முன்பதிவு/புதுப்பித்தல்

 * பயணமேடை சீட்டு முன்பதிவு

மொபைல் பயணச்சீட்டு முறையின் நன்மைகள்

* வரிசையில் காத்திருக்க வேண்டாம்.

 * காகிதமற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறை

* டிக்கெட் முன்பதிவு செய்தவுடன், இணைய இணைப்பு இல்லாமல் ஆஃப்லைன் முறையில் கூட பயணச்சீட்டை பரிசோதகருக்கு காட்டலாம்.

* அவசரமாக அல்லது பயணிக்க கடைசி நிமிட முடிவு எடுக்கும் பயணிகள் உடனடியாக புக் செய்யலாம். ரயில் நிலையங்களில் பல்வேறு இடங்களிலும் இருக்கும் கியு ஆர் குறியீட்டை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

* இந்த வசதி தற்போது 1600 நிலையங்களில் உள்ளது.

 * வாலட், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ மற்றும் இ வாலெட்டுகளை பயணிகள் பயன்படுத்தலாம்.

* மலிவானது: - ரயில்-வாலட் வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கு ரீசார்ஜில் 5% போனஸ் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757744

*****************



(Release ID: 1757868) Visitor Counter : 197