தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நியூஸ் ஆன் ஏர் செயலியில் அகில இந்திய வானொலி நிகழ்ச்சி: முதல் 10 இடத்துக்குள் நுழைந்தது கொல்கத்தா
प्रविष्टि तिथि:
24 SEP 2021 2:22PM by PIB Chennai
நியூஸ் ஆன் ஏர் செயலியில் ஒலிபரப்பப்படும் அகில இந்திய வானொலி நிகழ்ச்சி பிரபலமாக உள்ள முதல் 10 நகரங்களின் பட்டியலில், புதிதாக கொல்கத்தா நுழைந்துள்ளது.
பிரச்சார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர்-இல் அகில இந்திய வானொலியின் சுமார் 240 சேவைகள் நேரலையாக ஒலிபரப்பப்படுகின்றன.
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் 85-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 8000 நகரங்களில் வசிக்கும் மக்கள் இந்த செயலியின் வாயிலாக அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு வருகின்றனர்.
நியூஸ் ஆன் ஏர் செயலியின் ரேடியோ ஒலிபரப்பில் பிரபலமாக உள்ள நகரங்களின், நிகழ்ச்சிகள், சேனல்களின் தரவரிசை பட்டியலை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்.
செப்டம்பர் 1ம் தேதி முதல் 15 தேதி வரை பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில், இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757653
*****************
(रिलीज़ आईडी: 1757807)
आगंतुक पटल : 271