பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஹரியானாவில் உள்ள பச்காவ்ன் கிராமத்தில் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு இணை அமைச்சர் டாக்டர் முஞ்சப்பாரா மகேந்திரபாய் வழங்கினார்
Posted On:
23 SEP 2021 5:36PM by PIB Chennai
விடுதலையின் அம்ரித் மஹோத்சவத்தின் கீழ் நடைபெற்று வரும் ஊட்டச்சத்து மாத கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஹரியானாவில் உள்ள பச்காவ்ன் கிராமத்தில் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு இணை அமைச்சர் டாக்டர் முஞ்சப்பாரா மகேந்திரபாய் இன்று வழங்கினார்.
அமித்தி பல்கலைக்கழகத்திலிருந்து ஊட்டச்சத்து ரதம் ஒன்றையும் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கிராமங்களுக்கு செல்லவிருக்கும் இந்த ரதம் முறையான ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை குறித்த விழிப்புணர்வை அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் இடையே ஏற்படுத்தும்.
ஊட்டச்சத்து மிக்க பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்ட மரம் நடு விழா ஒன்றிலும் பங்கேற்ற அமைச்சர், ஊட்டச்சத்து உணவுகளுக்கான சமையல் குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து திட்டம் குறித்த பிரச்சார பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டார். ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழியும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஹரியானா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி கமலேஷ் தண்டா மற்றும் ஹரியானா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு முதன்மை செயலாளர் டாக்டர் ஜி அனுபமா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர், ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கவும் ஆரோக்கியம், உடல் நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மக்கள் பங்களிப்பு, நடத்தை முறைகள் மாற்றம் உள்ளிட்டவற்றின் மூலம் மேம்படுத்தவும் அரசு எடுத்து வரும் முயற்சியே ஊட்டச்சத்து திட்டம் என்று கூறினார். இதில் ஆண்களும் பெண்களும் சம அளவில் கலந்து கொள்வது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1757312
*****************
(Release ID: 1757402)