விவசாயத்துறை அமைச்சகம்
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேளாண் ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: திருமிகு ஷோபா கரந்த்லாஜே
Posted On:
22 SEP 2021 3:47PM by PIB Chennai
நமது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டுமென்றால், வேளாண் ஏற்றுமதிகளை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தி, வேளாண் விளைபொருட்களை ரசாயனம் இல்லாததாக மாற்ற வேண்டும் என்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் இணை அமைச்சர் திருமிகு ஷோபா கரந்த்லாஜே கூறினார்.
அபேடாவால் இன்று காலை பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்ட வாணிஜ்ய உத்சவ் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சமையல் எண்ணெய்களைத் தவிர அனைத்து துறைகளிலும் நாம் தன்னிறைவு அடைந்துள்ளோம் என்று கூறினார்.
எண்ணெய் பனை துறையில் தற்சார்பை அடைவதற்காக எண்ணெய் பனையை வளர்த்து, எண்ணெய் பதப்படுத்தும் ஆலைகளை நிறுவுவதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது என்று கூறிய அவர், இந்திய வேளாண் துறையின் எதிர்காலம் ஏற்றுமதிகளில் இருப்பதாக கூறினார்.
305 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானியங்களையும் 326 மில்லியன் மெட்ரிக் டன் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் கடந்த ஆண்டு இந்தியா உற்பத்தி செய்துள்ளது. கொவிட் பெருந்தொற்றுக்கு இடையில் சாதனை அளவு விவசாய விளைபொருட்களை இந்தியா உற்பத்தி செய்துள்ளது என்றார் அமைச்சர்.
ஏற்றுமதியாளர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு முகமைகள்/ பங்குதாரர்களின் சுமார் 25 அரங்குகள் அமைக்கப்பட்டன. அரங்குகளை பார்வையிட்ட அமைச்சர், அமைப்பாளர்களின் முயற்சிகளைப் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757016
----
(Release ID: 1757086)
Visitor Counter : 230