மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

இந்தியாவின் கால்நடை துறைக்கு உதவ பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் மத்திய அரசின் கால்நடை மற்றும் பால்வளத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 22 SEP 2021 6:19PM by PIB Chennai

 

நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு உதவவும், சிறிய அளவிலான கால்நடை உற்பத்தியாளர்களின் பொருளாதார நலனை பாதுகாக்கவும், நாட்டின் கால்நடை துறையை மேம்படுத்துவதில் இணைந்து செயல்பட மத்திய அரசின் கால்நடை மற்றும் பால்வளத்துறைபில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவை பல்லாண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சுதந்திர இந்தியாவின் வைர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, புதுதில்லியில் உள்ள கிரிஷி பவனில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கூட்டுறவு குறித்து பேசிய மத்திய கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, கூறுகையில், ‘‘கால்நடைகளின் ஆரோக்கியத்தை கண்காணிப்பது, மேம்படுத்துவது மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசின் கால்நடைத்துறை உறுதியாக உள்ளது. இந்தியாவில் கல்நடைத்துறையின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யகேட்ஸ் அறக்கட்டளையுடனான இந்த கூட்டுறவு, கால்நடைத்துறைக்கு தொழில்நுட்ப உதவியை வழங்கும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய அரசு அதிகாரிகள், உலக சுகாதார நிறுவன, உணவு மற்றும் வேளாண் அமைப்புகால்நடை நலனுக்கான உலக அமைப்பு (OIE) உலக வங்கி, ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மாநில கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757039

                                                                                       -----(Release ID: 1757083) Visitor Counter : 329


Read this release in: Urdu , English , Hindi