பாதுகாப்பு அமைச்சகம்

ஆயுதப்படைகளின் கொடி நாள் நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

Posted On: 22 SEP 2021 4:55PM by PIB Chennai

உயிரிழந்த அல்லது ஊனமுற்ற நமது தீரமிக்க வீரர்களை சார்ந்திருப்போரின் மறுவாழ்வு மற்றும் நலனுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதப்படைகளின் கொடி நாள் நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணுவ வீரர்களுக்கு கடமையாற்றுவதற்கான வாய்ப்பை நாட்டு மக்களுக்கு கொடி நாள் வழங்குகிறது.

ஆயுதப்படைகளின் கொடி நாள் நிதியின் மூலம் ஈட்டப்பட்ட வருவாயில், 7.5 சதவீதம் கார்பஸ் நிதிக்கு திரும்ப அளிக்கப்பட்டு, மிச்சமிருக்கும் நிதி முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ளோரின் நலனுக்கு பயன்படுத்தப்படுகிறது. நிதியாண்டு 2020-21-ல் 38,049 பயனாளிகளுக்கு ரூ 133.21 கோடி செலவிடப்பட்டது.

2020-21 நிதியாண்டில் ரூ 33.35 கோடி வசூலிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான நிர்வாக குழு மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நல செயலாளர் தலைமையிலான செயற்குழுவின் கீழ் கேந்திரிய சைனிக் வாரியத்தால் இந்த நிதி நிர்வகிக்கப்படுகிறது.

குழந்தைகளின் கல்வி, திருமணம், வறுமை, இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக முன்னாள் ராணுவ வீரர்கள், உயிரிழந்த வீரர்களின் மனைவிகள் மற்றும் சார்ந்தோருக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757004

----



(Release ID: 1757048) Visitor Counter : 254


Read this release in: English , Urdu , Hindi , Malayalam