சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

கோவளம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது

Posted On: 21 SEP 2021 7:45PM by PIB Chennai

அதன் அழகான கடற்கரை மற்றும் கடல்சார் சூழலியலைப் பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிக்கான மற்றுமொரு அங்கீகாரமாக, தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேசப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், “கோவளம் மற்றும் ஈடன் கடற்கரைகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலமும், 2020-இல் அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் மறுசான்றினாலும் இந்தியாவில் தற்போது 10 சர்வதேச நீலக்கொடி கடற்கரைகள் உள்ளன என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று கூறியுள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவுக்கான பயணத்தில் இன்னுமொரு மைல்கல்லாக இது அமைந்துள்ளது,” என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அங்கீகாரமான நீலக்கொடி சான்றிதழை வழங்கும் டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை, சிவராஜ்பூர்- குஜராத், கோக்லா- டையூ, காசர்கோடு மற்றும் படுபித்ரி- கர்நாடகா, கப்பாட்- கேரளா ருஷிகொண்டா- ஆந்திரா, கோல்டன்- ஒடிசா மற்றும் ராதாநகர்- அந்தமான் மற்றும் நிக்கோபார், ஆகிய எட்டு இந்தியக் கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழை உறுதி செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756806

 

----

 



(Release ID: 1756851) Visitor Counter : 351