உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
உத்தரகாண்ட் முதல்வர், லடாக் மற்றும் அந்தமான் & நிகோபார் துணைநிலை ஆளுநர்களுடன் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா ஆலோசனை
Posted On:
21 SEP 2021 7:40PM by PIB Chennai
உத்தரகாண்ட் முதல்வர் திரு புஷ்கர் தாமி, அந்தமான் & நிகோபார் துணைநிலை ஆளுநர் திரு அட்மிரல் டி கே ஜோஷி மற்றும் லடாக் துணைநிலை ஆளுநர் திரு ஆர் கே மாத்தூர் ஆகியோருடன் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா காணொலி மூலம் இன்று உரையாடினார். மேற்கண்ட மாநிலங்களில் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
உத்தரகாண்ட் முதல்வர் திரு புஷ்கர் தாமியுடனான உரையாடலின் போது, உத்தரகாண்டில் விமானப் போக்குவரத்துச் சூழலியலின் விரைவான வளர்ச்சிக்கான பின்வரும் அம்சங்களைப் பற்றி அமைச்சர் விவாதித்தார்:
* ஏர் டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்) மீது மாநிலத்தில் விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரியை 20 சதவீதத்திலிருந்து 1 சதவீதம் ஆகக் குறைத்தல்
* உதான் ஹெலிபோர்ட்டுகளை மேம்படுத்துதல் (அல்மோரா, சினாலிசூர், கோசார், நைனிடால், ஹல்ட்வானி, சஹஸ்த்ரதாரா, ஸ்ரீநகர் மற்றும் நியூ தெஹ்ரி) மற்றும் இந்த நிதியாண்டு இறுதிக்குள் ஐந்து புதிய ஹெலிபோர்ட்டுகளின் கட்டுமானப் பணிகள் தொடக்கம்.
* டேராடூன் விமான நிலையத்தில் புதிய முனையம், இதன் விளைவாக பயணிகளைக் கையாளும் திறன் ஒரு மணி நேரத்தில் 250-இல் இருந்து 1800 ஆக அதிகரிக்கும். ரூ 457 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம் அக்டோபர் 7-ஆம் தேதி திறக்கப்படும்.
அந்தமான் நிக்கோபார் தீவின் துணை நிலை ஆளுநர் அட்மிரல் டி கே ஜோஷியுடனான ஆலோசனையின் போது, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் போன்ற அழகிய இடத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க உறுதியாக உள்ளோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
லடாக்கின் துணைநிலை ஆளுநர் திரு ஆர். கே. மாத்தூருடனான உரையாடலின் போது, லடாக்கில் விமான நிலையங்கள் கட்டுவது குறித்தும், விமானப் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்தும் விரிவான ஆலோசனை நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756804
(Release ID: 1756846)
Visitor Counter : 380