சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
प्रविष्टि तिथि:
16 SEP 2021 6:12PM by PIB Chennai
மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் ‘சமாஜிக் அதிகாரித்தா ஷிவிர்’எனும் நிகழ்ச்சி 2021 செப்டம்பர் 17 அன்று கான்பூரில் உள்ள சரோஜினி நகரில் இருக்கும் கோல்டன் பேலசில் நடைபெறவுள்ளது.
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ திட்டத்தின்’ கீழ், இந்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஆலிம்கோவால் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
59 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 357 மூத்த குடிமக்களுக்கு ரூ 65.49 லட்சம் மதிப்பிலான 3610 உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்படும்.
கொவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் காணொலி மூலம் முதன்மை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இதே போன்றதொரு நிகழ்ச்சி ஜம்மு ஆளுநர் மாளிகையிலும் 2021 செப்டம்பர் 17 அன்று நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=17555503
------
(रिलीज़ आईडी: 1755575)
आगंतुक पटल : 297