சுரங்கங்கள் அமைச்சகம்

தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் (NMET) மூலம் கனிம ஆய்வை மேம்படுத்துவது குறித்த பயிலரங்கம்

Posted On: 16 SEP 2021 4:02PM by PIB Chennai

பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் சுரங்கம்  & புவியியல் துறைகள் மற்றும் மாநில கனிம மேம்பாட்டு கழகங்களின் நலனுக்காக தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் கனிம ஆய்வு முன்முயற்சிகள் குறித்த பயிலரங்கை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் (ஜிஎஸ்ஐ) மற்றும் மினெரல் எக்ஸ்புளோரேஷன் கார்ப்பொரேஷன் லிமிடெட் (எம்ஈசிஎல்) ஆகியவற்றுடன் இணைந்து சுரங்கங்கள் அமைச்சகம் புவனேஸ்வரில் இன்று நடத்தியது.

தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் மூலம் கனிம ஆய்வை மேம்படுத்துவது குறித்த நான்காவது பயிலரங்கம் இதுவாகும். இதற்கு முன், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களுக்காக ஜெய்ப்பூரிலும், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்காக லக்னோவிலும், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்காக போபாலிலும் பயிலரங்குகள் நடந்துள்ளன.

தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை நிதியுதவியுடன் நாட்டில் ஆய்வை மேம்படுத்துவதில் மாநில கனிம மற்றும் புவியியல் இயக்குநரகங்கள் மற்றும் சுரங்க கழகங்களின் பங்கை எடுத்துரைப்பதற்கான அறிவுசார் தகவல்களை பகிரும் தளமாக இந்த பயிலரங்கம் அமைந்தது.

கனிம துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஆய்வு நடவடிக்கைகளை திட்டமிடுமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன. இதுவரை பயன்படுத்தப்படாத கனிம வளங்களை கண்டறிய அங்கீகாரம் பெற்ற ஆய்வு முகமைகளின் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன. மாநில அரசுகளுக்கு தேவையான ஒத்துழைப்பை கனிம அமைச்சகம் வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755438

 

------



(Release ID: 1755559) Visitor Counter : 224


Read this release in: English , Urdu , Hindi , Punjabi