மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை துறையில் இந்தியா-இத்தாலி இடையே ஒத்துழைப்புடன் செயல்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 15 SEP 2021 4:02PM by PIB Chennai

பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை துறையில் இந்தியா-இத்தாலி இடையே ஒத்துழைப்புடன்  செயல்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை துறையில் ஒத்துழைப்பு குறித்து, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் இத்தாலி பொது பாதுகாப்புத்துறை இடையே செய்யப்பட்ட புரிந்துணைர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.

பயன்கள்:

பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இத்தாலியின் பொது பாதுகாப்புத்துறை இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தானது

இரு தரப்பின் பேரிடர் மேலாண்மை முறைகளால் இந்தியா மற்றும் இத்தாலி பயனடைய இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். பேரிடர் மேலாண்மை துறையில் தயார் நிலை, மீட்பு நடவடிக்கை, திறன் மேம்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும்.

                                                                                                                                                ------

 


(Release ID: 1755101) Visitor Counter : 349