எஃகுத்துறை அமைச்சகம்
ராஷ்டிரிய இஸ்பட் நிகாம் நிறுவனத்திற்கு ராஜபாஷா கீர்த்தி புரஸ்கார் விருது
प्रविष्टि तिथि:
15 SEP 2021 1:23PM by PIB Chennai
2020-21 ஆம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக அமல்படுத்துவதில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக மத்திய எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராஷ்டிரிய இஸ்பட் நிகாம்- விசாகப்பட்டினம் எஃகு ஆலைக்கு ‘ராஜபாஷா கீர்த்தி புரஸ்கார்'- முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற தேசிய இந்தி தின கொண்டாட்டங்களின் போது மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் இடமிருந்து நிறுவனத்தின் இயக்குநர் (வணிகம்) திரு டி கே மொஹந்தி விருதைப் பெற்றுக்கொண்டார்.
ராஷ்டிரிய இஸ்பட் நிகாம் நிறுவனத்தின் கீழ் செயல்படும் நகர அலுவல் மொழி அமலாக்கக் குழுவும் 2020-21 ஆம் ஆண்டிற்கான ‘ராஜபாஷா கீர்த்தி புரஸ்கார்'- முதல் பரிசைப் பெற்றது. இந்த விருதைக் குழுவின் தலைவரும் ராஷ்டிரிய இஸ்பட் நிகாம் நிறுவனத்தின் இயக்குநருமான (வணிகம்) திரு டி கே மொஹந்தி மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நிஷித் பிரமணிக் இடமிருந்து பெற்றுக்கொண்டார். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் இந்தி தின நிகழ்ச்சி நடைபெற்றது.
2019-20 ஆம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக அமல்படுத்துவதில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காகவும் ராஷ்டிரிய இஸ்பட் நிகாம்- விசாகப்பட்டினம் எஃகு ஆலைக்கு ‘ராஜபாஷா கீர்த்தி புரஸ்கார்- முதல் பரிசு' வழங்கப்பட்டது. நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் திரு ஜி. காந்தி விருதைப் பெற்றுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755013
*****
(Release ID: 1755013)
(रिलीज़ आईडी: 1755054)
आगंतुक पटल : 216