பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊரக இந்தியாவை தற்சார்புடையதாக்குவதில் ஸ்வாமித்வா திட்டம் முக்கிய பங்காற்றும்: மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங்

प्रविष्टि तिथि: 14 SEP 2021 6:06PM by PIB Chennai

ஸ்வாமித்வா திட்டத்தின் தேசியக் கூட்டத்தை, புதுதில்லியில் உள்ள ஸ்கோப் வளாகத்தில் உள்ள மையத்தில் மத்திய பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிப்பதற்கான வசதியையும், ஸ்வாமித்வா இணையளத்தில் (https://svamitva.nic.in/) மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.

துவக்க உரையில் மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் பேசியதாவது:ஸ்வாமித்வா திட்டத்தின் அமலாக்கத்தை மாநிலங்கள் 2024ஆம் ஆண்டு காலக்கெடுவுக்கு முன்பாக முடிக்கவேண்டும். இதை மாநிலங்கள் சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இலக்கை விரைவில் நிறைவு செய்வதற்குத் தேவையான உதவியை மத்திய அரசு வழங்கும். தற்சார்பு இந்தியாவை உருவாக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதி எடுத்துள்ளார். தற்சார்பு கிராமங்களை உருவாக்குவதில் ஸ்வாமித்வா திட்டம் முக்கியமான நடவடிக்கை ஆகும். ஸ்வாமித்வா திட்டத்தை சுதந்திர தின உரையிலேயே பிரதமர் குறிப்பிட்டார். இது அவரின் தொலைநோக்கு. ஊரக இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்பத்தையும், தரவையும் பயன்படுத்த அவர் நினைத்தார்.

தொழில்நுட்பம் மற்றும் தரவுப் பயன்பாடு, ஊரக இந்தியாவை மேலும் வெளிப்படையானதாக மாற்றும். ஸ்வாமித்வா திட்டத்தை அமல்படுத்துவதில் பஞ்சாயத்துக்களின் பங்கை அதிகரிக்க வேண்டும். 

ஊரக மக்களுக்கான சொந்த உரிமை உணர்வை ஸ்வாமித்வா வழங்கும். ஸ்வாமித்வா அட்டை உதவியின் மூலம், கிராம மக்கள் கடன் பெற முடியும். ஊரக இந்தியாவை தற்சார்புடையதாக்குவதில் ஸ்வாமித்வா திட்டம் முக்கியமான பங்காற்றும்.

இத்திட்டத்தில் ட்ரோன்களை நியாயமாகப் பயன்படுத்த வேண்டும். இத்திட்டத்தின் பயன்களை அடைவதற்கு ட்ரோன்கள் முக்கியமான கருவிகள். நாள் ஒன்றுக்கு ஒரு ட்ரோன் குழுவுக்கு குறைந்தது ஐந்து கிராமங்களை மாநிலங்கள் வழங்க வேண்டும். உண்மை நிலவரத்தைக் கண்டறிய, படம் பிடிக்கப்பட்ட வரைபடங்களின் அம்சங்களை மாநிலங்களுக்கு வழங்க 15 நாள் காலக்கெடுவை பின்பற்ற வேண்டும். அவற்றை மாநிலங்கள் 30 நாட்களுக்குள், இந்திய சர்வே அமைப்புக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் கூறினார்.

பங்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு. கபில் மொரேஷ்வர் பேசுகையில், ஸ்வாமித்வா திட்ட இலக்கை காலக்கெடுவுக்கு முன்பாக அடைய வேண்டும் என வலியுறுத்தினார். ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் சுஷ்ரி சாத்வி நிரஞ்சன் பேசுகையில், ‘‘ஊரக வளர்ச்சியிலும், மக்களை தற்சார்புடையதாக்குவதிலும் ஸ்வாமித்வா திட்டம் முக்கிய பங்காற்றும்’’ என்றார்.

அனைத்து மாநிலங்களும் இத்திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் திரு ஃபகன் சிங் குலாஸ்தே வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754831

                                                  -------


(रिलीज़ आईडी: 1754908) आगंतुक पटल : 416
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi