வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் 2021 ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்த விலைக் குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு: 2011-12)

Posted On: 14 SEP 2021 12:00PM by PIB Chennai

இந்தியாவில் 2021 ஆகஸ்ட் மாதத்துக்கான (தற்காலிகம்) மற்றும் ஜூன் மாதத்துக்கான (இறுதி) மொத்த விலைக் குறியீட்டு எண்களை (அடிப்படை ஆண்டு: 2011-12),  தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மொத்த விலைக் குறியீட்டின் (WPI) தற்காலிகப் புள்ளிவிவரங்கள், நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்டு, தொகுத்து  ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி (அல்லது அடுத்த வேலை நாளில்) குறிப்பு மாதத்தின் இரண்டு வார கால தாமதத்துடன் வெளியிடப்படும். 10 வாரங்களுக்குப்பின், இந்தக் குறியீட்டு எண்கள் இறுதி செய்யப்பட்டு, வெளியிடப்படும்

2021 ஆகஸ்ட் மாதத்துக்கான ஆண்டு பணவீக்க விகிதம் 11.39 (தற்காலிகம்). இது 2020 ஆகஸ்ட் மாதத்தில் 0.41 சதவீதமாக இருந்ததுகனிம எண்ணெய், பெட்ரோலியப் பொருள்கள், இயற்கை எரிவாயுஅடிப்படை உலோகத் தயாரிப்புகள், உணவுப் பொருள்கள், ஜவுளிகள், இரசாயனங்கள் மற்றும் இரசாயனப் பொருள்கள் ஆகியவற்றின் விலை அதிகரிப்பால், 2021 ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம்  அதிகரித்தது.

கடந்த மூன்று மாதங்களில், மொத்த விலைக்  குறியீட்டுக்  கூறுகளின் வருடாந்திர மாற்றம் மற்றும் பணவீக்கம் கீழேயுள்ள இணைப்பில்  கொடுக்கப்பட்டுள்ளது  https://pib.gov.in/ PressReleasePage.aspx? PRID=1754709

 

*****

 


(Release ID: 1754762) Visitor Counter : 234