குடியரசுத் தலைவர் செயலகம்

நீதித்துறையில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும்: குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த்

Posted On: 11 SEP 2021 2:57PM by PIB Chennai

நமது அரசமைப்பின் அனைத்தையும் உள்ளடக்கிய லட்சியங்களை நாம் அடைய வேண்டுமென்றால், நீதித்துறையிலும் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் கூறினார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் இன்று (2021 செப்டம்பர் 11) நடைபெற்ற உத்தரப் பிரதேச தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்ற கட்டிட வளாகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நீதியை பெற ஏழைகள் படும் கஷ்டத்தை தாம் அருகில் இருந்து பார்த்தாக தெரிவித்த குடியரசுத் தலைவர், நீதித்துறையின் மீது அனைவருக்கும் எதிர்ப்பார்ப்புகள் உள்ளன, ஆனால், நீதிமன்றங்களின் உதவியை பெற பொதுவாக மக்கள் தயாராக இல்லை என்றார். இந்த நிலைமை மாறி, நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

அனைவருக்கும் சரியான நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும், நீதி அமைப்பிற்கான செலவுகள் குறைவாக இருக்க வேண்டும், மக்கள் புரிந்து கொள்ளும் மொழிகளில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், குறிப்பாக பெண்கள் மற்றும் சமுதாயத்தின் நலிவுற்ற பிரிவினருக்கு நீதி கிடைக்க வேண்டும், இவற்றை உறுதி செய்வது நம் அனைவரின் பொறுப்பு என்று அவர் கூறினார்.

நீதி அமைப்பில் உள்ள அனைவரும் தங்களது சிந்தனையையும் பணி கலாச்சாரத்தையும் மாற்றி, இன்னும் உணர்திறன் மிக்கவர்களாக மாறினால் மட்டுமே இது சாத்தியம்.

சட்டத்தின் ஆட்சி சார்ந்த அமைப்பை வலுப்படுத்துவதில் தரமான சட்டக் கல்வி முக்கிய பங்காற்றுவதாக குடியரசுத் தலைவர் கூறினார். உலகத்தரம் வாய்ந்த சட்டக் கல்வி நமது சமுதாயம் மற்றும் நாட்டின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். தற்போதைய அறிவுசார் பொருளாதாரத்தின் காலத்தில், அறிவுசார் வல்லரசாவதற்கான லட்சியமிகுந்த கொள்கை நமது நாட்டில் தற்போது செயல்படுத்தப்படுகிறது. உத்தரப் பிரதேச தேசிய சட்ட பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முடிவு இந்த திசையை நோக்கிய ஒரு நடவடிக்கை ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754104 

*****************



(Release ID: 1754172) Visitor Counter : 173