தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நியூஸ் ஆன் ஏர் செயலியில், பணியாற்றும் மக்கள் அதிகம் இணைந்துள்ளனர்
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2021 3:41PM by PIB Chennai
நியூஸ் ஆன் ஏர் செயலியில் ஒலிபரப்பப்படும் அகில இந்திய வானொலியின் நேரடி நிகழ்ச்சிகளை, புனே, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, மற்றும் கொச்சியை சேர்ந்த, தொழிலாளர்கள் அதிகம் கேட்கின்றனர். அகில இந்திய வானொலியில், நேரடி நிகழ்ச்சிகளை கேட்பவர்களில் 75 சதவீதம் பேர், 25 வயது முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இந்திய முன்னணி நகரங்களின் சமீபத்திய தரப்பட்டியலில், நியூஸ் ஆன் ஏர் செயலியில், அகில இந்திய ரேடியோவின் நேரடி நிகழ்ச்சிகள், மிகவும் பிரபலம். நகரங்களின் தரப்பட்டியலில் சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்கள் முன்னேறியுள்ளன. தில்லி தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் பின்தங்கியுள்ளன.
நியூஸ் ஆன் ஏர் செயலியின், அகில இந்திய ரேடியோவின் நேரடி நிகழ்ச்சிகள் பிரபலமாக உள்ள நகரங்கள், முன்னணி நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்,
இந்த தரவரிசை ஆகஸ்ட் 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலானது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753847
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1753909)
வருகையாளர் எண்ணிக்கை : 229