மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

டிஜிட்டல் கல்வியறிவின் செயல்பாட்டாளர்களாக பிஎம்ஜிதிஷா மற்றும் பொது சேவை மையங்கள் உருவாகியுள்ளன: இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்

Posted On: 08 SEP 2021 6:37PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் கீழ் இன்று நடைபெற்றபிஎம்ஜிதிஷா பிரச்சார தொடக்க விழா மற்றும் அனைத்து டிஜிட்டல் கிராமங்களிலும் 100% டிஜிட்டல் கல்வியறிவு குறித்த அறிவிப்பு நிகழ்ச்சியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் இன்று கலந்து கொண்டார்.

அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கிராமப்புற பகுதிகளில் அரசின் முன்னணி டிஜிட்டல் எழுத்தறிவு திட்டமான பிஎம்ஜிதிஷாவின் கீழ் பிஎம்ஜிதிஷா பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் செப்டம்பர் 8 முதல் 10 வரை கிராமப்புற மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் வசதிகள் அதிகமில்லா சமுதாயங்களுக்கு, மூன்று நாள் சான்றிதழ் நிகழ்ச்சி நடத்தப்படும். செப்டம்பர் 11 முதல் 13 வரையும் பிஎம்ஜிதிஷாவின் கீழ் இதே போன்றதொரு சான்றிதழ் திட்டம் செயல்படுத்தப்படும்.

இது தவிர, அனைத்து டிஜிட்டல் கிராமங்களிலும் 100% டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற கிராமங்களாக மாற்ற பொது சேவை மையங்கள் திட்டமிட்டுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜீவ் சந்திரசேகர், டிஜிட்டல் ஒருங்கிணைத்தலுக்காக தொழில் நுட்பத்தை பயன்படுத்திய பிரத்தியேக நாடு இந்தியா என்றும், இதில் பொது சேவை மையங்கள் பெரும்பங்கு ஆற்றின என்றும் கூறினார்.

சாதாரண மக்களின் வாழ்வை மாற்றியமைப்பதற்கும், அரசு மற்றும் மக்களுக்கு இடையே உள்ள இடைவெளியை பூர்த்தி செய்வதற்குமான பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை அடைவதில் டிஜிட்டல் கல்வியறிவின் செயல்பாட்டாளர்களாக பிஎம்ஜிதிஷா மற்றும் பொது சேவை மையங்கள் உருவாகியுள்ளன என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753266

 

-----



(Release ID: 1753360) Visitor Counter : 343


Read this release in: English , Urdu , Hindi , Punjabi