மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கல்வியில் தொழில்நுட்பம் குறித்த தேசிய கருத்தரங்கை கல்வி அமைச்சகம் நடத்தியது
Posted On:
08 SEP 2021 6:32PM by PIB Chennai
2021 செப்டம்பர் 5 முதல் 17 வரையிலான ஆசிரியர் திருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பல்வேறு தலைப்புகளின் கீழ் இணைய கருத்தரங்குகளை ஒன்பது நாட்களுக்கு கல்வி அமைச்சகம் நடத்தி வருகிறது. “கல்வியில் தொழில்நுட்பம்: தேசிய டிஜிட்டல் கல்வி கட்டமைப்பு” என்பது இன்றைய கருத்தரங்கின் தலைப்பாகும்.
கல்வி அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுதுறையின் செயலாளர் திரு அனிதா கர்வால், தேசிய தகவல் மையத்தின் துணை தலைமை இயக்குநர் திரு ராஜேந்தர் சேதி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திருமதி அனிதா கர்வால், தனிநபர்கள் மற்றும் சமுதாயங்கள் கல்வியறிவை பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும், கல்வியறிவு பெற்ற சமூகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் செப்டம்பர் 8-ஐ சர்வதேச கல்வியறிவு நாளாக யுனெஸ்கோ அறிவித்ததாக கூறினார்.
‘மனிதர்கள் சார்ந்த மீட்சிக்கான கல்வியறிவு: டிஜிட்டல் இடைவெளியை குறைத்தல்’ என்பது இந்த வருட சர்வதேச கல்வியறிவு நாளின் மையக்கரு என்று கூறிய அவர், டிஜிட்டல் கல்வியறிவு இலக்கை அடைவதில் தேசிய டிஜிட்டல் கல்வி கட்டமைப்புக்கு முக்கிய பங்குள்ளதால் அது குறித்த இணைய கருத்தரங்கு இன்று நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
இன்றைய இணைப்பு உலகம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுவதாகவும், எனவே டிஜிட்டல் கல்வியறிவு, நிதி கல்வியறிவு மற்றும் வாழ்க்கை முறையை எளிதாக்கும் இதர திறமைகள் ஒன்றிணைந்ததே கல்வியறிவு என்றும் அவர் கூறினார். மக்களின் 100 சதவீத கல்வியறிவே நமது லட்சியம் என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753262
---
(Release ID: 1753354)
Visitor Counter : 243