ரெயில்வே அமைச்சகம்

மத்தியப் பிரதேசத்தில் பிரம்மாண்ட சுரங்கம் அமைக்கும் பணியில் இந்திய ரயில்வே தீவிரம்

Posted On: 08 SEP 2021 6:04PM by PIB Chennai

பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த பராமரிப்புப் பணிகளை இந்திய ரயில்வே தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதன்படி மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் போபால்- இடார்சி வழித்தடத்தில் பர்கெரா-புத்னி (26.50 கிலோமீட்டர்) இடையேயான மூன்றாவது வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைப்பதற்காக பிரம்மாண்ட சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்திய ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம், மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மற்றும் ரெய்சன் மாவட்டங்களில் 5 சுரங்கங்களை அமைத்து வருகிறது. இதன் மூலம் தில்லி-சென்னை உள்ளிட்ட வழித்தடங்களில் நெரிசல் குறைவதுடன் ரயில்களின் வேகமும் அதிகரிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753255

 

----



(Release ID: 1753346) Visitor Counter : 212


Read this release in: English , Urdu , Hindi , Punjabi