அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சண்டிகரின் முதல் மகரந்தத் தூள் நாள்காட்டியின் மூலம் ஒவ்வாமை காரணிகள் அடையாளம் காணப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும்

Posted On: 06 SEP 2021 3:54PM by PIB Chennai

ஒவ்வாமை குறித்த தெளிவான புரிதலை மருத்துவர்கள் மற்றும் அதன் மூலம் பாதிக்கப்படுவோருக்கு வழங்கும் வகையிலும், காற்றில் மாசு பரவும் போது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையிலும் சண்டிகரின் முதல் மகரந்தத் தூள் நாள்காட்டி விளங்குகிறது.

காற்று மூலம் பரவும் மாசு குறித்து ஆய்வு செய்த பின்னர் சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்ஈஆர்-ன் சமுதாய மருத்துவத் துறை மற்றும் பொது சுகாதாரப் பள்ளி இந்த நாள்காட்டியை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் ஊடகங்களின் வாயிலாக மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, ஒவ்வாமை உண்டாக்கக்கூடிய துகள்கள் காற்றில் அதிகமாக பரவும் போது அவற்றில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.

சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்ஈஆர்-ன் சமுதாய மருத்துவத் துறை மற்றும் பொது சுகாதாரப் பள்ளியை சேர்ந்த டாக்டர் ரவீந்திர காய்வால் தலைமையிலான குழு இதை சாத்தியமாக்கியுள்ளது.

முன்னணி ஆய்வாளரான டாக்டர் காய்வால் இது குறித்து கூறுகையில், சண்டிகர் பகுதியில் வனத்தின் அளவு சமீப வருடங்களாக அதிகரித்துள்ளதாகவும், பசுமைமிகு இடங்களின் அதிகரிப்பால் காற்று மாசும் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

மகரந்தத் தூள் நாள்காட்டியை https://www.care4cleanair.com/champ எனும் இணைப்பில் மக்கள் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752542

*****************


(Release ID: 1752629) Visitor Counter : 232


Read this release in: English , Urdu , Hindi , Punjabi