மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கல்வித்துறையில், தேசிய கல்விக் கொள்கை புரட்சியை ஏற்படுத்தும்: மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

Posted On: 05 SEP 2021 7:21PM by PIB Chennai

கல்வித்துறையில், தேசிய கல்விக் கொள்கை புரட்சியை ஏற்படுத்தும் என  மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏஐசிடிஇ-விஸ்வேஸ்வரய்யா நல்லாசிரியர் விருதுகளை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் 17 பேராசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று வழங்கினார்.

அதேநேரத்தில், மேலாண்மை கல்வியில், 3 பேராசிரியர்களுக்கும் ஏஐசிடிஇ-டாக்டர் ப்ரீதம் சிங் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன.   சத்ரா விஸ்வகர்மா விருது, சுத்தமான கல்லூரி வளாக விருது ஆகியவற்றையும் வெற்றியாளர்களுக்கு அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியல் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ‘‘ சுதந்திரத்தின் 75வது ஆண்டை நாம் நிறைவு செய்கையில், நாட்டை செதுக்க வேண்டும் என்ற விருப்பம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை, இந்திய கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் 2047 தொலைநோக்குக்கு ஏற்ப அடுத்த 25 ஆண்டுகளுக்கான பாதையை வகுக்கும்’’ என்றார். கல்வி நம் ஒவ்வொருவரையும், அதிக பொறுப்புடையவராகவும் மற்றும் உலகளாவிய குடிமக்களாகவும் மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஊக்குவித்தார். அவர்கள் தங்களின் துறைசார்ந்த நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் எனவும், அப்போதுதான், உறுதியான சாதனைகள் படைக்க முடியும் எனவும் அவர் ஊக்குவித்தார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752374

---­



(Release ID: 1752402) Visitor Counter : 215


Read this release in: English , Urdu , Hindi , Marathi