பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் ஏகலைவா பள்ளி ஆங்கில ஆசிரியர் உட்பட 44 பேருக்கு, நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 05 SEP 2021 7:10PM by PIB Chennai

நாடு முழுவதும், மிகவும் திறமைமிக்க, 44 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இன்று வழங்கினார். சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் கர்பாவந்த் என்ற இடத்தில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் திரு பிரமோத் குமார் சுக்லாவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

ஏகலைவா பள்ளி ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெறுவது  இது இரண்டாவது முறை. இதனால் மத்திய பழங்குடியின அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஏகலைவா மாதிரி பள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கடந்தாண்டு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஏகலைவா -கல்சி துணை முதல்வர் திருமிகு சுதா பைனுலி கடந்த 2020ம் ஆண்டில் இந்த விருதை பெற்றார்.

ஆன்லைனில் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்ட 3 அடுக்கு ஆய்வுக்குப்பின், நாடு முழுவதும் இருந்து 44 மிகச் சிறந்த ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். கொவிட்-19 நெருக்கடி காரணமாக, சுதந்திரமான தேசிய நடுவர் அமைப்பிடம், இந்த ஆசிரியர்கள் காணொலி காட்சி மூலம், தங்கள் சாதனைகளை விளக்கினர்புது தில்லியிருந்து காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில், இந்த விருது வழங்கப்பட்டது.

அந்தந்த மாநில தலைநகரங்களில் ஆசிரியர்கள் இணைந்து கொண்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ஏகலைவா பள்ளியில் பணியாற்றும் திரு சுக்லா, இடது சாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர பழங்குடியின பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரப்பணிப்புடன் கல்வி கற்றுக் கொடுக்கிறார்இவரது கற்பித்தல் பயணத்தின் மிக தனித்துவமான சாதனைகளில், இலவச நாடக நாள், சொல்லகராதி ராக்கெட் போன்றவை கற்றலை தூண்டும் விதத்திலானது மற்றும் அனுபவம் அடிப்படையிலானது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752368

-----


(Release ID: 1752395) Visitor Counter : 305


Read this release in: English , Urdu , Hindi , Punjabi