ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்வேயின் 156 சுகாதார மையங்களில் மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது

Posted On: 03 SEP 2021 5:18PM by PIB Chennai

தற்போதைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் தடைகளற்ற சேவைகளை வழங்குவதற்கு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சுகாதார சேவை அமைப்பு அவசியமாகிறது. இதை கருத்தில் கொண்டு, ரயில்வே அமைச்சகத்தின் மினி ரத்னா பொதுத்துறை நிறுவனமான ரயில் டெல் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சிடாக்கின் ஏ பிரிவு (இ சுஷ்ருத்) ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் உள்ள 129 ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் 586 சுகாதார மையங்களில் மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பை நிறுவுவதற்கான பணி வழங்கப்பட்டது.

இதன் மூலம் ஒட்டுமொத்த ரயில்வே சுகாதார அமைப்பும் ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு வேகமான, தடையற்ற மற்றும் சிரமங்கள் அற்ற சுகாதார சேவைகளை வழங்க முடியும். இந்திய ரயில்வேயின் 156 சுகாதார மையங்களில் மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள மையங்களில் 2021-ம் ஆண்டுக்குள் இது நிறுவப்பட்டு விடும்.

மருத்துவ பயனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில் கைப்பேசி செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களது மின்னணு மருத்துவ ஆவணத்தை நோயாளிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகலாம். தொலைமருத்துவம், ஆய்வக அறிக்கை அணுகல், நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகளின் தகவல்கள் உள்ளிட்டவையும் இந்த செயலியில் உள்ளன. சுய பதிவு முறையும் இச்செயலியில் உள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்க திட்டத்துடன் இந்த அமைப்பு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பிரத்தியேக மருத்துவ அடையாளம் ஐபாஸ் மற்றும் அர்பன் உள்ளிட்ட இந்திய ரயில்வேயின் இதர டிஜிட்டல் திட்டங்களுடனும் மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751738

*****************

 



(Release ID: 1751833) Visitor Counter : 227


Read this release in: English , Urdu , Hindi , Telugu