தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நியூஸ் ஆன் ஏர் வானொலி நேரடி ஒலிபரப்பின் உலகளாவிய தரவரிசை: தென்கிழக்கு ஆசியாவில் அகில இந்திய வானொலியின் தமிழ் சேனல் பிரபலம்
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2021 1:25PM by PIB Chennai
முக்கிய மாற்றமாக அகில இந்திய வானொலியின் நேரடி ஒலிபரப்பின் உலகளாவிய தரவரிசை பட்டியலில், ஏஐஆர் கொடைக்கானல் முதல் 10 இடத்துக்குள் வந்துள்ளது. ஏஐஆர் சென்னை ரெயின்போ மற்றும் ஏஐஆர் நியூஸ் 24*7 ஆகியவை முறையே 6வது மற்றும் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளன.
நியூஸ் ஆன் ஏர் செயிலியில், அகில இந்திய வானொலியின் நேரடி ஒலிபரப்புகள் உலகளவில் பிரபலமாக உள்ளன. சமீபத்திய முன்னணி நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 8வது இடத்துக்கு வந்துள்ளது. பிஜியை 4வது இடத்துக்கு தள்ளி இங்கிலாந்து 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் ஏஐஆர் தமிழ் மிகவும் பிரபலமாக உள்ளது.
அகில இந்திய வானொலியில் 240-க்கும் மேற்பட்ட வானொலி நிகழ்ச்சிகள், பிரச்சார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர்-ல் நேரடியாக ஒலிபரப்பப்படுகின்றன. இவற்றை இந்தியாவில் மட்டும் அல்லாமல், உலகளவில் 85 நாடுகளில், 8000 நகரங்களில் ஏராளமான நேயர்கள் கேட்கின்றனர்.
இந்தியா தவிர, ஏஐஆர் நேரடி நிகழ்ச்சிகள், நியூஸ் ஆன் ஏர் செயலியில் உலகளவில் பிரபலமாக உள்ளன. கடந்த மாதம் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், முன்னணி நாடுகள், முன்னணி சேனல்கள், முன்னணி நிகழ்ச்சிகளின் தரவரிசை பட்டியலை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751661
*****
(Release ID: 1751661)
(வெளியீட்டு அடையாள எண்: 1751712)
வருகையாளர் எண்ணிக்கை : 273