மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செப்டம்பர் 5 முதல் 17 வரை ஆசிரியர் திருவிழா நடைபெறவுள்ளது

Posted On: 02 SEP 2021 5:54PM by PIB Chennai

ஆசிரியர்களுக்கான தேசிய விருது மற்றும் சிக்‌ஷக் பர்வ் எனும் ஆசிரியர் திருவிழா குறித்து பள்ளிக் கல்வி கூடுதல் செயலாளர் திரு சந்தோஷ் குமார் சாரங்கி மற்றும் இணை செயலாளர்கள் திரு ஆர் சி மீனா மற்றும் திரு விபின் குமார் ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை இன்று நடத்தினர்.

நமது ஆசிரியர்களின் மதிப்புமிகுந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், புதிய கல்விக் கொள்கை 2020-ஐ முன்னெடுத்து செல்லும் வகையிலும், சென்ற வருடத்தை போலவே இந்த வருடமும் ஆசிரியர் திருவிழாவை கொண்டாட பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை முடிவெடுத்துள்ளதாக திரு சாரங்கி கூறினார். 2021 செப்டம்பர் 5 முதல் 17 வரை காணொலி முறையில் இது நடைபெறும்.

இரண்டு கோடிக்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்புமருந்து வழங்குவதற்கான பணி நடைபெற்று வருவதாகவும், மாநிலங்களில் இதன் முன்னேற்றத்தை பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை கண்காணித்து வருவதாகவும் திரு சாரங்கி தெரிவித்தார். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முடிவுகளுக்கு இது வலு சேர்க்கும்.

2021 செப்டம்பர் 5 அன்று காணொலி மூலம் 44 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் விருது அளிப்பார் என்று திரு மீனா கூறினார். ஒவ்வொரு ஆசிரியரை பற்றியும் ஆவணப்படம் ஒன்று திரையிடப்படும்.

2021 செப்டம்பர் 7 அன்று காலை 7 மணிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வித்துறை தொடர்புடையோரிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடுவார் என்று திரு விபின் குமார் தெரிவித்தார். 10,000 வார்த்தைகளை கொண்ட இந்திய சைகை மொழி அகராதி உள்ளிட்ட துறையின் ஐந்து திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751464

*****************


(Release ID: 1751519) Visitor Counter : 293
Read this release in: Hindi , English , Urdu , Punjabi